@ அண்டனூர் சுரா புதுக்கோட்டை சந்தைப்பேட்டை மாட்டுச் சந்தைக்கும் வடக்குப் புறமாக உள்ள குளம் அக்சா குளம் என்கிற பெயரைத் தாங்கி இருக்கிறது. இது குளம் அல்ல, ஓடை. தற்போது குளமாக சுருங்கிப் போயிருக்கிறது. அதாவது அடப்பன் குளத்திற்கும் நேர் தெற்கில் இக்குளம் இருக்கிறது. ஒரு காலத்தில் இக்குளத்தைச் சுற்றிலும் வயற்காடுகள் இருந்திருக்கின்றன. இந்த வயல்களைத் தூர்த்து தெருக்களும் குடியிருப்புகளும் வந்துவிட்டன. ஆகவே இத்தெரு அக்சா வயல் முதல் தெரு, இரண்டாம் தெரு என்கிற பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வயற்காட்டுக்குப் பாசன நீர் தந்த குளம் தற்போது நீர்த்தாமரை, அல்லி, நாணல், பாசி, கருவைக்காடுகள் மண்டிப்போய் மக்கள் பயன்பாடற்று காட்சியளிக்கிறது. இக்குளத்தின் கரையில் சமீபகால பிள்ளையார் இருக்கிறது. அது என்னதாம் அக்சா குளம் என்று விசாரிக்கையில் அது அக்சா குளம் அல்ல, அக்காச்சியா குளம் என்று தெரியவந்தது. புதுக்கோட்டை மன்னர்கள் விஜயநகர அரசின் தொடச்சிகள். இவர்கள் தெலுங்கு பேசுபவர்கள். இவர்கள் மாமாவை பாவா என்று அழைப்பார்கள். அக்காவை அக்காச்சியா என்றும் அக்கம்மா என்றும் அழைத்தவர்கள்....