இடுகைகள்

திசை சந்தைக்குப் பெயர் போன புதுக்கோட்டை

படம்
@ அண்டனூர் சுரா  பிரிட்டிஷ் இந்தியாவிலும் சென்னை மாகாணத்திலும் கிறிஸ்துவ மத மரபைப் பின்பற்றி ஞாயிறு விடுமுறை நாளாக இருந்தது. ஆனால் புதுக்கோட்டை  சுதந்திர சுதேச அரசாக இருந்ததால் மேலும் மன்னர் இந்து என்பதால் பிரிட்டிஷாரின் ஞாயிறு விடுமுறை விதிக்குக் கட்டுப்படாமல் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகக் கடைபிடித்தது. புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான்கள் திருக்கோகர்ணம் பெரியநாயகி (பிரகதம்பாள்) அம்மனைத் தங்கள் குலதெய்வ வழிபாட்டு தெய்வமாக ஏற்று ஆட்சி செய்தனர். இந்து   வழிபாடு மரபில் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். மன்னர் முதல் பொது மக்கள் வரை அம்மன் வழிபாட்டில் தடையின்றிப் பங்கேற்க அந்நாளை விடுமுறை நாளாக அறிவித்தார்.                 மேலும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் முக்கிய பொருளாதார மையமாக விளங்கியது வாரச்சந்தை. திருச்சிராப்பள்ளி, மதுரை நகருக்கு அடுத்ததாக மிகப்பெரிய சந்தையாக புதுக்கோட்டை வாரச்சந்தை விளங்கியது. புதுக்கோட்டை நகரைச் சுற்றிலுமிருந்த நகர வணிகர்கள், நுகர்வோர்கள் நகருக்குள் ந...

15.08.1947 அன்றைய சமஸ்தான புதுக்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்

படம்
  புதுக்கோட்டை நகர சுதந்திரக் கொண்டாட்டம் இந்திய சுதந்திர நாள் ஆகஸ்ட் 15, 1947 அன்று அதிகாலை முதலே புதுக்கோட்டை நகரில்   பூப்போல மழைத் தூறிக்கொண்டிருந்தது. இந்திய சுதந்திரத்தை வானமும் மேகமும் பூமாரி பொழிந்து வாழ்த்துவதாகவே   அந்த மழை இருந்தது. புதுக்கோட்டை நகருக்குள் பலரும் சுதந்திரத் தினத்தைக் கொண்டாடவும் கொண்டாட்டத்தைப் பார்க்கவும் வந்துகொண்டிருந்தார்கள். மக்கள் வந்து ஒன்றுகூடிய இடமாக பழைய அரண்மனை சதுக்கம் இருந்தது. இந்த சதுக்கம் இன்றைய புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம், விஜய், பிரகதம்பாள் சினிமா தியேட்டருக்கும் கிழக்கு, நகர் மன்றம், டிஇஎல்சி பள்ளிக்கும் தெற்கு, கீழராஜவீதி முதல் வீதிக்கும் மேற்கு, பல்லவன் குளம், பழைய அரண்மனைக்கும் வடக்கு   இதற்கு உட்பட்ட இடமாகும். மன்னர் வருகை              காலை   7.30 மணி அளவில் சமஸ்தான காவலர்களின் அணி வகுப்பு நடந்தது.   இந்த அணிவகுப்பின் தலைவராக சார்ஜென்ட் மேஜர் எங்கர் இருந்தார். மாட்சிமை தங்கிய மன்னர் ராஜகோபாலத் தொண்டைமான் அவர்கள் தன் சகோதரர், மெய்க்காப்பாளரு...

உலக நவீன நகரங்களில் ஒன்றாக புதுக்கோட்டை

படம்
 @அண்டனூர் சுரா வால்டர் ஹாமில்டன் எனும் நில வரையியல் ஆங்கிலேய ஆய்வாளர் பிரிட்டிஷார் தன் ஆளுகையின்கீழ் வைத்திருந்த அனைத்து நாடுகளுக்கும் சென்று அந்நாட்டிலுள்ள நகரங்களையும் அந்நாட்டு மக்கள் வாழ்நிலைகளையும் பதிவு செய்து இரு பெரும் தொகுதிகளாக நூல் வெளியிட்டார். இந்நூல் 1815 ஆம் ஆண்டு முதல் பதிப்பாகவும் 1828 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது. EAST – INDIA GAZETTEER CONTANING PARTICULAT DESCRIPTIONS OF THE EMPIRES, KINGDOM, PRICIPALITIES, PROVINCES, CITES, TOWNS, DISTRICTS, FORTRESSES, HARBOURS, RIVERS , LAKES & C, OF HINDOSTAN AND THE ADJACENT COUNTRIES INDIA BEYONR THE GANGES AND THE EASTERN ARCHIPELAGO ; TOCFTHER WITH SKETCHES OF THE MANNERS, CUSTOMS, INSTITUTIONS, AGRICULTURE, COMMERCE, MANUFACTURES, REVENUES, POPULATIONS, CASTES, RELIGION, HISTORY, & C OF THEIR VARIOUS INHABITANTS. இந்நூல் கிழக்கிந்திய கம்பெனியின்கீழ் இந்துஸ்தான் பரப்பிற்குள் இயங்கிய பேரரசுகள், அரசுகள், மன்னர்கள், மாகாணங்கள், பெருநகரங்கள், நகரங்கள், மாவட்டங்கள், கோட்டைகள், துறைமுகங்கள், ஆற...