உலக நவீன நகரங்களில் ஒன்றாக புதுக்கோட்டை

 @அண்டனூர் சுரா

வால்டர் ஹாமில்டன் எனும் நில வரையியல் ஆங்கிலேய ஆய்வாளர் பிரிட்டிஷார் தன் ஆளுகையின்கீழ் வைத்திருந்த அனைத்து நாடுகளுக்கும் சென்று அந்நாட்டிலுள்ள நகரங்களையும் அந்நாட்டு மக்கள் வாழ்நிலைகளையும் பதிவு செய்து இரு பெரும் தொகுதிகளாக நூல் வெளியிட்டார். இந்நூல் 1815 ஆம் ஆண்டு முதல் பதிப்பாகவும் 1828 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது.





EAST – INDIA GAZETTEER

CONTANING PARTICULAT DESCRIPTIONS

OF THE EMPIRES, KINGDOM, PRICIPALITIES, PROVINCES, CITES, TOWNS, DISTRICTS, FORTRESSES, HARBOURS, RIVERS , LAKES & C, OF HINDOSTAN
AND THE ADJACENT COUNTRIES INDIA BEYONR THE GANGES AND THE EASTERN ARCHIPELAGO ; TOCFTHER WITH SKETCHES OF THE MANNERS, CUSTOMS, INSTITUTIONS, AGRICULTURE, COMMERCE, MANUFACTURES, REVENUES, POPULATIONS, CASTES, RELIGION, HISTORY, & C OF THEIR
VARIOUS INHABITANTS.




இந்நூல் கிழக்கிந்திய கம்பெனியின்கீழ் இந்துஸ்தான் பரப்பிற்குள் இயங்கிய பேரரசுகள், அரசுகள், மன்னர்கள், மாகாணங்கள், பெருநகரங்கள், நகரங்கள், மாவட்டங்கள், கோட்டைகள், துறைமுகங்கள், ஆறுகள், ஏரிகள், இந்நாட்டிற்குள் அருகிலுள்ள நாடுகள், தீவுக்கூட்டங்கள், குடிமக்கள், பழக்க வழக்கங்கள், நிறுவனங்கள், விவசாயம், வணிகம், உற்பத்திகள், வருவாய், மக்கட்தொகை, சாதிகள், மதங்கள், வரலாறு மற்றும் ஓவியங்கள் இவற்றை உள்ளடக்கியதாகும்.

சூரியன் மறையாத நாடு என்று பெருமை கொண்டிருந்த நாடு பிரிட்டிஷ். அந்நாட்டினரின்கீழ் ஆளுகைக்கொண்டிருந்த நகரங்களின் பதிவுகள் முக்கிய ஆவணமாக கருதப்பட்டது. இந்நூல் வில்லியம் பிராடி எனும் ஆங்கிலேயரிடம் இருந்தது. இவர் யாரென்றால் காலனித்துவ கால மெட்ராஸ் மாகாணத்தின் 11 ஆவது ஆளுநராக இருந்த ஜேம்ஸ் பிராடி என்பவரின் மகன் ஆவார்.

இந்த அரியவகை நூல் 1960 – 70 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் பிராடி நூலகத்திலிருந்து ஏலம் விடப்பட்டது. இந்நூலை பிராடியின் வாரிசான ஸ்டான் பேஜேட்டிடமிருந்து ஜெஃப்ரி பேட்ஸ் என்பவர் வாங்கினார்.

உலகில் எந்தெந்த நகரங்களெல்லாம் பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழிருந்ததோ அவ்வளவு நகரங்களும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நூலின் இரண்டாவது தொகுதியில் புதுக்கோட்டை நகரம் குறித்த பதிவு இடம் பெற்றுள்ளது. இக்குறிப்பின் இறுதியில் புதுக்கோட்டையின் முதல் ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட முதல் அதிகாரியான ப்ளாக்பர்ன் பெயரும் ஃபுல்லார்டன் என்கிறவர் பெயரும் அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்நிலையிலான புதுக்கோட்டை சேஷையா சாஸ்திரி திவானாக இருந்த  ஆட்சிக்காலத்தில் விரிவாக்கம் செய்து நகரமைப்பு செய்யப்பட்டதாகும். இந்த விரிவாக்கத்திற்கும் முந்தைய புதுக்கோட்டை எப்படியாக இருந்தது என்று சொல்லும் அபூர்வ வரலாற்று பதிவு இது.

புதுக்கோட்டை குறித்து இந்நூல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. புதுக்கோட்டை தொண்டைமான்களின் அரண்மனை ஒழுங்கற்ற தனித்தனி கட்டடங்களைக் கொண்டிருந்தது. அரண்மனைக்குள் அழகான குளம், கோவில்கள் இருந்தது. அரண்மனையைச் சுற்றிலும் பெரும் காடுகள், காட்டுக்குள் காட்டுமிருகங்கள் வாழ்ந்தன

புதுக்கோட்டை நகரம் நவீன நகரமாகவும் அழகான, சுத்தமான நகரமாகும். நகரத்தின் வீதிகள் சரியான கோணங்களில் சந்திக்கிறது. புதுக்கோட்டை நகரத்திலிருந்து ஒன்றரை மெல் தொலைவில் ஆங்கிலப் பாணியைப் பின்பற்றி கட்டப்பட்ட சொகுசு விடுதி இருக்கிறது. ஐரோப்பிய பயணிகள் புதுக்கோட்டை வந்தால் அந்த விடுதியில் தங்குவார்கள்…ஆகிய விபரத்தை இந்நூல் கொண்டுள்ளது.

இந்நூலின் பதிவை அப்படியே தருகிறேன்.


PUDUCOTTA

A town in the Carnatic province, the capital of Tondiman`s country, about thirty – four miles travelling  distance from the fort of Trichinopoly; lat.10^O 18’N., lon.78^58’ E. Tondiman’s palace here consists of an irregular congregation of detached edifices, with a fine tank and handsome Hindoo temple, all within the same enclosure. Chevamundaporum, a place in the in the woods, about  three miles distant from puducotta, was formerly the royal residence; but it has long gone to ruin, and is now only frequented by wild beasts.

The modern town of puducotta is remarkable for its wide, regular, and clean streets, intersecting each other at right angles. The houses are of moderate dimensions, generally  stuccoed, whitened, and tiled, and a few of the most respectable with terraced roofs. A thick jungle encompasses the town on all sides for the depth of a mile, and is its only defence, it being without fortifications, not even a mud wall, which sufficiently proves  its erection having taken place subsequent to the establishment of the British authority. About a mile and half to the south – west of his capital, Tondiman has an excellent house, build and furnished after the English fashion, where every respectable European traveller  is sure of meeting with a hospitable reception. This town is still erroneously placed in the best maps .( Fullaton, Blackburne,&c.)










 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

டி.இ.எல்.சி (TELC)