புதுக்கோட்டை கீழராஜ வீதியில் புதுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கி எனும் பெயரில் ஒரு வங்கி இயங்குகிறது. இந்த வங்கி நகர வங்கி (TOWN BANK)எனும் பெயரால் தொடங்கப்பட்டது. இந்த வங்கியே புதுக்கோட்டையின் முதல் வங்கியாகும் . பிரிட்டிஷ் இந்திய சட்டம் -10/1904 இன்படி முக்கிய நகரங்களில் கூட்டுறவு வங்கி தொடங்க அனுமதியளித்தது. இச்சட்டத்தை ஏற்று புதுக்கோட்டை சமஸ்தானம் 1908 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கம் அமைத்தது. இதன்படி முதல் கூட்டுறவு சங்கம் கரம்பக்குடியில் தொடங்கப்பட்டது. அடுத்து 1909 ஆம் ஆண்டு ஆலங்குடியிலும் அதே ஆண்டு புதுக்கோட்டை நகரில் பிரகதம்பாள் பெயரில் ஒரு கூட்டுறவு சங்கமும் தொடங்கப்பட்டன . இந்த சங்கங்களின் வரவு செலவுக்காக தொடங்கப்பட்ட வங்கி இது, நகர வங்கி (TOWN BANK). மே, 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 1921 ஆம் ஆண்டு வரை வாடகை கட்டடத்தில் இயங்கியது. பிறகு கிழக்கு இரண்டாம் வீதியில் சொந்த கட்டடத்திற்கு மாறியது . 1925 ஆம் ஆண்டு கீழ ராஜ வீதிக்கு அதாவது நேர் முன்புறம் மாற்றப்பட்டது. இந்த வங்கி தற்போது மிக நீளமான கட்டடத்தைக் கொண்டிருக்கிறது. கீழராஜ வீதியிலிருந்...
தமிழ்நாட்டிலுள்ள பேருந்து நிலையங்களில் நன்கு திட்டமிடப்பட்ட பேருந்து நிலையமாக புதுக்கோட்டை பேருந்து நிலையம் திகழ்கிறது. காரணம் இந்த நிலையம் 'ப' வடிவிலும் பேருந்துகள் நெரிசலில்லாமல் எளிதாக உள்ளே நுழைந்து வெளியேறும்படியாகவும் உள்ளது. புதுக்கோட்டை நகராட்சிக்கென்று ஒரு பரந்த பேருந்து நிலையம் இல்லாத நிலை இருந்தது. பழைய பஸ் ஸ்டாண்ட் என்று சொல்லப்படுகின்ற பழைய பேருந்து நிலையம் பேருந்து நிறுத்தம் (bus stop) என்கிற அளவிலேயே இருந்தது. மதுரை, சிவகங்கை, அறந்தாங்கி பேருந்துகள் வந்து திரும்ப அந்த நிறுத்தம் உகந்த இடமாகவும் திருச்சி, தஞ்சாவூர், மணப்பாறை பேருந்துகள் நகர வீதிகள் வழியே நுழைந்து அந்த இடத்திற்கு வந்தாக வேண்டிய நிலையும் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆகவே வேறொரு இடத்தில் விசாலமான பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான இடம் தேடுகையில் நகரத்திற்கு தென்மேற்கில் பரந்த நீர்நிலையைக் கொண்ட காட்டுப்புதுக்குளம் உகந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது. மழைக்காலத்தில் பெரும் தெப்பமாகவும் கோடை காலத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் காடாகவும் இந்த இடம் இருந்தது....
புதுக்கோட்டை நகரவாசிகள் மட்டுமல்ல, நகரத்தைச் சுற்றியுள்ள பலரும் எதோ ஒருவகையில் டிஇஎல்சி உடன் நெருக்கம் கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டை, கரம்பக்குடி, இலுப்பூர், கீரனூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் புதுக்கோட்டை பள்ளியில் படிக்க விரும்பினால் அவர்களது முதல் தேர்வு டி இ எல் சி பள்ளியாகவே இருக்கும். டிஇஎல்சி என்பது என்ன? தமிழ் எவாஞ்சலிகல் லுத்தரன் சர்ச் என்பதன் சுருக்கமே டி.இ.எல்.சி. தற்போது இது 'தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை' என்று அழைக்கப்படுகிறது. லுத்தரன் என்பது என்ன? கிறிஸ்தவ மதத்தில் மூடநம்பிக்கைகளும் பிற்போக்கான பரப்புரைகளும் அதிகமானதால் பதினாறாம் நூற்றாண்டில் மார்டின் லுதர் கிறித்தவ மதத்திற்குள் சீர்த்திருத்தத்தை புகுத்தினார். அவரது பரப்பரைக்கு ஆதரவு பெருகியது. அதேநேரம் கிறிஸ்தவ பழைமைவாதிகள் மார்டின் லுதரைப் பின்பற்றுபவர்களை லுத்தரன் என்று கேலி பெயரால் அழைத்தார்கள். அச்சொல்லைக்கொண்டு உருவான கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவே எவாஞ்சலிகல் லுத்தரன். எவாஞ்சலிகல் என்கிற சொல் சுவிசேஷ என்றானது. இதன் தமிழ்ப்பதம் நற்செய்தி! தரங்கம்பாடியில் அச்...
கருத்துகள்
கருத்துரையிடுக