வடிமதகு சந்து @ அண்டனூர் சுரா
புதுக்கோட்டை வீதி மட்டுமல்ல, குறுக்குச் சந்துகளும் நேராகவே இருக்கும். ஆனால் இந்த சந்து பாம்பைப் போல வளைந்து நெளிந்து இருக்கிறது. சந்தின் பெயர் வடிமதகு சந்து.
சந்தின் இருபுறமும் நகைக்கடைகளும் அடகுக் கடைகள் இருக்கின்றன. அது என்ன வடிமதகு சந்து என்று அந்த வழியே சென்று பார்த்தால் சந்து பல்லவன் குளத்தில் சென்று முடிகிறது.
பல்லவன் குளத்தில் தண்ணீர் நிறைகையில் குளத்திலிருந்து மதகு வழியே தண்ணீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கால்வாய் இன்றும் உள்ளது. அதாவது பாதாளத்தில். அக்கால்வாய்மீது சாலையிட்டு இருபுறமும் கடைகள் உள்ளன. முன்பு இப்பகுதி குடியிருப்பு பகுதியாக இருந்தது என்று சொல்லும்விதமாக சிலகடைகள் வீடாகவே இருப்பதைக் கொண்டு அறியமுடிகிறது. இந்தச் சந்து தொடங்கும் மதகு வாயில்தான் ஸ்ரீ சாந்தநாதர் கோவில் உள்ளது.
நன்றி - ஒட்டடை பாலச்சந்திரன்
கருத்துகள்
கருத்துரையிடுக