சத்தியமூர்த்தி சாலையும் புதிய பேருந்து நிலையமும் @அண்டனூர் சுரா

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் 26.04.1966 அன்று நாட்டப்பட்டது. அன்றைய உணவுத் துறை அமைச்சரும் புதுக்கோட்டைக்கு உட்பட்ட திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. வெ. இராமையா அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்தச் செய்தி அடங்கிய கல்வெட்டு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பிறகு புதிய பேருந்து நிலையம் 19.04.1981 அன்று கட்டித் திறக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழாவிற்கு அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ப. குழந்தைவேலு அவர்கள் தலைமை வகிக்க, செய்தி, அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம. வீரப்பன் அவர்கள் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு பெருந்தொழிற்துறை அமைச்சர் திரு. எஸ். திருநாவுக்கரசு அவர்கள் முன்னிலை வகித்தார்கள். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் திரு.எஸ்.டி காசிராஜன் அவர்கள். நகராட்சி ஆணையர் இரா.வேலு பி.ஏ. இக்கட்டடத்தின் பொறியாளர் திரு. கே. பாலசுப்பிரமணியன். தலைமைக் கொத்தனார் திரு.மு. பழனியப்பன். இந்தக் கல்வெட்டில் தலைமைக் கொத்தனாரின் பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேரு...