இரட்டைக் குளம் சந்து

 புதுக்கோட்டை என்பது குளமும் குளம் சார்ந்த நிலப்பகுதி கொண்ட  ஊராகும். புதுக்கோட்டை நகரம் என்பதே பல குளங்களைத் தூர்த்து எழுப்பப்பட்ட நகரம்தானே!

புதுக்கோட்டை திருவேள்பூரிலிருந்து (திருவப்பூர்) மலையடி கருப்பர் கோவில் செல்லும் வழியில் இடது புறம் குறுகிய சந்து செல்கிறது. இந்தச் சந்துக்கு இரட்டை குளம் சந்து என்று பெயர். அது என்ன இரட்டை குளம், என்று உள்ளே சென்று பார்த்தால் குறுகிய சந்தின் இருபுறமும் இரண்டு குளங்கள் இருக்கின்றன. குளம் என்றால் மண் தரையை வெட்டியோ,  குளிர்ப்பதற்காக அல்லது விவசாயத்திற்காக வெட்டப்பட்ட குளம் அல்ல. குண்டு வைத்து பாறையை உடைத்து எடுக்கப்பட்ட பள்ளத்தில் நீர் நிரம்பப்பெற்ற குளங்கள்.




குளம் என்பதே நீர் நிரம்பப்பெற்ற பள்ளம்தானே. குளம் ஒழுங்கற்று இருந்ததால் பார்க்க பயமாக இருந்தது. நீர் வேறு கருப்பாக இருந்தது. குளிக்கலாம். நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டு திரும்ப முடியாது. குளத்திற்குள் பாறையின் கூர்ப்பு எங்கேயும் இருக்கும்.

இரட்டை நகரம், இரட்டை காப்பியம், இரட்டைக் கோபுரம் போன்று இரட்டை குளங்கள். 


இரட்டைகுளம் சந்து வித்தியாசமான ஒரு தெருதான்!

 இக்குளத்தைக் காட்டியவர் - கவிஞர்.திரு.பெருமாள்பட்டி அடைக்கலம் அவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

டி.இ.எல்.சி (TELC)