புதுக்கோட்டை முன் மாதிரிப் பள்ளி @ அண்டனூர் சுரா
‘மாநிலத்தில் பூத்த சில மலர்கள் மாலையாகி மணம் ததும்பும் தமிழ்நாடு’ எனும் வாசகத்துடன் பெருமையுடன் இயங்கிய பள்ளி மாடல் ஸ்கூல் என்று அழைக்கப்படும் புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப் பள்ளி.
1980 - 90 ஆம் ஆண்டுகளில் புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப் பள்ளிக்குள் நுழைந்தால் மேற்கண்ட வாசகம் மாணவர்களை வரவேற்கும். இப்பள்ளிக்குள் மாணவர்கள் நுழைவது அவ்வளவு எளிதான ஒன்றாக இருந்ததில்லை.தமிழ்நாட்டில் இரண்டு முன்மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆண்களுக்கான பள்ளி புதுக்கோட்டை மச்சுவாடியிலும் பெண்களுக்கான பள்ளி சென்னை சைதாப்பேட்டையிலும் தொடங்கப்பட்டன.
புதுக்கோட்டை முன்மாதிரிப் பள்ளி 04.09.1972 அன்று உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டது. இப்பள்ளி பிறகு 1978 ஆம் ஆண்டு மேனிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. இதன்பிறகு இப்பள்ளிக்குள் மாணவர்கள் நுழைவதும் இப்பள்ளியில் இடம் கிடைப்பதும் பெருமைக்குரியதாகவும் சவாலானதாகவும் மாறியது. பள்ளியோடு விடுதியும் இணைந்திருந்த ஒரே ஆண்கள் பயிலும் பள்ளி இதுவாகும். இப்பள்ளிக்காக தமிழக வனத்துறை முப்பது ஏக்கர் இடம் வழங்கியது.
மாநிலத்தில் பூத்த சில மலர்கள் மாலையாகி மணம் ததும்பும் தமிழ்நாடு
எனும் வாசகத்திற்கும்கீழ் தமிழ்நாடு மாவட்ட நிலவரைபடமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிலக்க, ஈரில்லக்க எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த எண்கள் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் இன்று மருத்துவராகவும் உயர் பதவியிலும் வகிக்கிறார்கள். மேலும் இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் பலர் பிரபல எழுத்தாளர்களாக திகழ்ந்துள்ளார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக