இடுகைகள்

உலக நவீன நகரங்களில் ஒன்றாக புதுக்கோட்டை

படம்
 @அண்டனூர் சுரா வால்டர் ஹாமில்டன் எனும் நில வரையியல் ஆங்கிலேய ஆய்வாளர் பிரிட்டிஷார் தன் ஆளுகையின்கீழ் வைத்திருந்த அனைத்து நாடுகளுக்கும் சென்று அந்நாட்டிலுள்ள நகரங்களையும் அந்நாட்டு மக்கள் வாழ்நிலைகளையும் பதிவு செய்து இரு பெரும் தொகுதிகளாக நூல் வெளியிட்டார். இந்நூல் 1815 ஆம் ஆண்டு முதல் பதிப்பாகவும் 1828 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது. EAST – INDIA GAZETTEER CONTANING PARTICULAT DESCRIPTIONS OF THE EMPIRES, KINGDOM, PRICIPALITIES, PROVINCES, CITES, TOWNS, DISTRICTS, FORTRESSES, HARBOURS, RIVERS , LAKES & C, OF HINDOSTAN AND THE ADJACENT COUNTRIES INDIA BEYONR THE GANGES AND THE EASTERN ARCHIPELAGO ; TOCFTHER WITH SKETCHES OF THE MANNERS, CUSTOMS, INSTITUTIONS, AGRICULTURE, COMMERCE, MANUFACTURES, REVENUES, POPULATIONS, CASTES, RELIGION, HISTORY, & C OF THEIR VARIOUS INHABITANTS. இந்நூல் கிழக்கிந்திய கம்பெனியின்கீழ் இந்துஸ்தான் பரப்பிற்குள் இயங்கிய பேரரசுகள், அரசுகள், மன்னர்கள், மாகாணங்கள், பெருநகரங்கள், நகரங்கள், மாவட்டங்கள், கோட்டைகள், துறைமுகங்கள், ஆற...

பேரறிஞர் அண்ணா சிலை புதுக்கோட்டை கீழராஜ வீதியில் நிறுவப்பட காரணம் என்ன?

படம்
 @ அண்டனூர் சுரா அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தியடிகள் இரு தலைவர்களுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் அதிகமான சிலை ஒருவருக்கு  நிறுவப்பட்டுள்ளது என்றால் அது பேரறிஞர் அண்ணாவிற்குத்தான். அண்ணா சிலை அண்ணல் அம்பேத்கர் சிலை அளவிற்குப் பரபரப்பும் பதட்டமும் கொண்டதல்ல.  ஒன்று குனிந்த தலை நிமிராமல் கையில் ஒரு புத்தகம் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பார். இல்லையேல் ஏதேனும் ஒரு சதுக்கத்தில் அல்லது ஒரு வட்டமான போக்குவரத்து வழிச் சாலையின் மையத்தில்  ஏதேனும் ஒரு திசையை விரல்நீட்டியவராய் நின்றுகொண்டிருப்பார். அண்ணா சிலை என்பது இந்த இரண்டில் ஒன்றாகவே இருக்கும். புதுக்கோட்டையின் முதல் சிலை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் தொடங்கி கீழ ராஜ வீதி வரை  அடுத்தடுத்து நிறைய சிலைகள் உள்ளன. புதுக்கோட்டையில் நிறுவப்பட்டுள்ள முதல் சிலை மன்னர் மார்த்தாண்ட பைரவர் தொண்டைமானுக்கு நிறுவப்பட்ட சிலையாகும். இச்சிலை நீதிமன்ற வளாகத்தின் முகப்பில் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை குறித்து வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம். இதே நீதிமன்ற வளாகத்திற்குள் மேலும் இரண்டு தலைவர்களின் சிலைகள் உள்ளன. ஒன்று தீரர் ச...

சத்தியமூர்த்தி சாலையும் புதிய பேருந்து நிலையமும் @அண்டனூர் சுரா

படம்
  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் 26.04.1966 அன்று நாட்டப்பட்டது. அன்றைய உணவுத் துறை அமைச்சரும் புதுக்கோட்டைக்கு உட்பட்ட திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. வெ. இராமையா அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்தச் செய்தி அடங்கிய கல்வெட்டு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பிறகு புதிய பேருந்து நிலையம் 19.04.1981 அன்று கட்டித் திறக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழாவிற்கு அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ப. குழந்தைவேலு அவர்கள் தலைமை வகிக்க, செய்தி, அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம. வீரப்பன் அவர்கள் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு பெருந்தொழிற்துறை அமைச்சர் திரு. எஸ். திருநாவுக்கரசு அவர்கள் முன்னிலை வகித்தார்கள். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் திரு.எஸ்.டி காசிராஜன் அவர்கள். நகராட்சி ஆணையர் இரா.வேலு பி.ஏ. இக்கட்டடத்தின் பொறியாளர் திரு. கே. பாலசுப்பிரமணியன். தலைமைக் கொத்தனார் திரு.மு. பழனியப்பன். இந்தக் கல்வெட்டில் தலைமைக் கொத்தனாரின் பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேரு...

எழில் நினைவமைப்பு @அண்டனூர் சுரா

படம்
ஒரு மாவட்டம் உதயமாகையில் அதன் நினைவாக ஓர் அடையாளம் நிறுவப்படுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டம் 14.01.1974 அன்று தோற்றுவிக்கப்பட்டது.  இந்நாளை நினைவு கூறும் வகையில் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் ஒரு நினைவுதூண் நிறுவப்பட்டுள்ளது.  சுதந்திர போராட்ட வீரர்களுக்கான நினைவுதூண் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தூணில் இரண்டு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றில் எழில் நினைவமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் தோற்றம் திருவள்ளுவராண்டு  2005 தைத்திங்கள் முதல் நாள் 14.01.1974 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களால் 20 01.1974 அன்று துவக்கி வைக்கப்பட்டது. கல்வெட்டு இரண்டு புதுக்கோட்டை மாவட்டம் தோற்ற எழில் நினைவமைப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி அவர்களால் 08.06.1975 அன்று திறந்துவைக்கப்பட்டது .

இரட்டைக் குளம் சந்து

படம்
  புதுக்கோட்டை என்பது குளமும் குளம் சார்ந்த நிலப்பகுதி கொண்ட  ஊராகும். புதுக்கோட்டை நகரம் என்பதே பல குளங்களைத் தூர்த்து எழுப்பப்பட்ட நகரம்தானே! புதுக்கோட்டை திருவேள்பூரிலிருந்து (திருவப்பூர்) மலையடி கருப்பர் கோவில் செல்லும் வழியில் இடது புறம் குறுகிய சந்து செல்கிறது. இந்தச் சந்துக்கு இரட்டை குளம் சந்து என்று பெயர். அது என்ன இரட்டை குளம், என்று உள்ளே சென்று பார்த்தால் குறுகிய சந்தின் இருபுறமும் இரண்டு குளங்கள் இருக்கின்றன. குளம் என்றால் மண் தரையை வெட்டியோ,  குளிர்ப்பதற்காக அல்லது விவசாயத்திற்காக வெட்டப்பட்ட குளம் அல்ல. குண்டு வைத்து பாறையை உடைத்து எடுக்கப்பட்ட பள்ளத்தில் நீர் நிரம்பப்பெற்ற குளங்கள். குளம் என்பதே நீர் நிரம்பப்பெற்ற பள்ளம்தானே. குளம் ஒழுங்கற்று இருந்ததால் பார்க்க பயமாக இருந்தது. நீர் வேறு கருப்பாக இருந்தது. குளிக்கலாம். நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டு திரும்ப முடியாது. குளத்திற்குள் பாறையின் கூர்ப்பு எங்கேயும் இருக்கும். இரட்டை நகரம், இரட்டை காப்பியம், இரட்டைக் கோபுரம் போன்று இரட்டை குளங்கள்.  இரட்டைகுளம் சந்து வித்தியாசமான ஒரு தெருதான்!  இக்குளத...

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

படம்
  தமிழ்நாட்டிலுள்ள பேருந்து நிலையங்களில் நன்கு திட்டமிடப்பட்ட  பேருந்து நிலையமாக புதுக்கோட்டை பேருந்து நிலையம் திகழ்கிறது. காரணம் இந்த நிலையம் 'ப' வடிவிலும் பேருந்துகள் நெரிசலில்லாமல் எளிதாக உள்ளே நுழைந்து வெளியேறும்படியாகவும் உள்ளது. புதுக்கோட்டை நகராட்சிக்கென்று ஒரு பரந்த பேருந்து நிலையம் இல்லாத நிலை  இருந்தது. பழைய பஸ் ஸ்டாண்ட் என்று சொல்லப்படுகின்ற பழைய பேருந்து நிலையம் பேருந்து நிறுத்தம் (bus stop) என்கிற அளவிலேயே இருந்தது. மதுரை, சிவகங்கை, அறந்தாங்கி பேருந்துகள் வந்து திரும்ப அந்த நிறுத்தம் உகந்த இடமாகவும் திருச்சி, தஞ்சாவூர், மணப்பாறை பேருந்துகள் நகர வீதிகள் வழியே நுழைந்து அந்த இடத்திற்கு வந்தாக வேண்டிய நிலையும் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆகவே வேறொரு இடத்தில் விசாலமான பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான இடம் தேடுகையில் நகரத்திற்கு தென்மேற்கில் பரந்த நீர்நிலையைக் கொண்ட காட்டுப்புதுக்குளம் உகந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது.  மழைக்காலத்தில் பெரும் தெப்பமாகவும் கோடை காலத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் காடாகவும் இந்த இடம் இருந்தது....

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

படம்
புதுக்கோட்டை கீழராஜ வீதியில் புதுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கி எனும் பெயரில் ஒரு வங்கி இயங்குகிறது. இந்த வங்கி நகர வங்கி (TOWN BANK)எனும் பெயரால் தொடங்கப்பட்டது.  இந்த வங்கியே புதுக்கோட்டையின் முதல் வங்கியாகும் . பிரிட்டிஷ் இந்திய சட்டம் -10/1904 இன்படி முக்கிய நகரங்களில் கூட்டுறவு வங்கி தொடங்க அனுமதியளித்தது.  இச்சட்டத்தை ஏற்று புதுக்கோட்டை சமஸ்தானம்  1908 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கம் அமைத்தது. இதன்படி முதல் கூட்டுறவு சங்கம்  கரம்பக்குடியில் தொடங்கப்பட்டது. அடுத்து 1909 ஆம் ஆண்டு ஆலங்குடியிலும் அதே ஆண்டு புதுக்கோட்டை நகரில் பிரகதம்பாள் பெயரில் ஒரு கூட்டுறவு சங்கமும் தொடங்கப்பட்டன .  இந்த சங்கங்களின் வரவு செலவுக்காக தொடங்கப்பட்ட  வங்கி இது, நகர வங்கி (TOWN BANK). மே, 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 1921 ஆம் ஆண்டு வரை வாடகை கட்டடத்தில் இயங்கியது. பிறகு கிழக்கு இரண்டாம் வீதியில் சொந்த கட்டடத்திற்கு மாறியது . 1925 ஆம் ஆண்டு கீழ ராஜ வீதிக்கு அதாவது நேர் முன்புறம் மாற்றப்பட்டது. இந்த வங்கி தற்போது மிக நீளமான கட்டடத்தைக் கொண்டிருக்கிறது. கீழராஜ வீதியிலிருந்...