கொட்டகைக்காரத் தெரு @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை நகரம் மச்சுவாடி - ஜீவா நகர் இரண்டிற்குமிடையில்  இடது புறம் செல்லும் குறுகிய சாலை கொட்டகைக்காரத் தெரு ஆகும். தெருவின் பெயருக்கேற்ப சாலையின் ஒரு புறம் அடுக்கடுக்காக மரங்களும் ப்ளெக்ஸ் ஒட்டிவைக்கும் சட்டங்களும் சாய்த்து வைக்கப்பட்டுள்ளன.


புதுக்கோட்டை நகரத்தை கட்டமைத்து விரிவாக்கம் செய்கையில்  நகரத்திற்குள்ளும் வெளியிலும் கூரை வீடுகளும் கூரைக் கடைகளும் அதிகமிருந்தன.  இவை மழையால், புயலால் சேதாரம் அடைகையில் அவற்றை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டிய தேவை இருந்தது.  கொட்டகை போடுவதையும் கூரைகள் மேய்வதையும் தொழிலாகக் கொண்ட பல குடும்பங்கள் நகரைச் சுற்றிலும் குடியிருந்தார்கள். இவர்கள் ஒருசேர குடியேறிய இடம் கொட்டகைக்காரத் தெரு.

ஒரு காலத்தில் புதுக்கோட்டை நகரைச் சுற்றிலும் நடைபெறு‌ம் ஊர்த் திருவிழாவிற்குச் சினிமா கொட்டகை, நாடகக் கொட்டகை இவர்களே அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஊர்த் திருவிழா இரவு நேர நாடகங்களில் நடிக்க வரும் நாடக நடிகைகள் புதுக்கோட்டை கொட்டகைக்காரங்கள வச்சி மேடை அமைக்கணும் என்பதை ஒரு நிபந்தனையாக விதித்திருக்கிறார்கள். அந்தளவிற்கு உறுதியான மேடை, பந்தல், கொட்டகை அமைப்பதற்கு பெயர்பெற்றவர்கள் இவர்கள்.

இன்றும் பெரிய கட்சிகளின் அரசியல் மாநாட்டிற்கு இவர்களே பந்தல், மேடை அமைத்துக் கொடுக்கிறார்கள். இவர்களின் குடியிருப்பு எப்படியாக இருக்கிறதென்று  பார்ததுவர  உள்ளே சென்றால் வீடுகள் பல கொட்டகைகளாக இருந்தன. 

ஊருக்கே கொட்டகை போடும் மக்கள் குடியிருக்கும் தெரு கொட்டகைக்காரத் தெரு என்கிற நிலை மாறி கொட்டகைகள் அதிகமாகக் கொண்ட தெரு கொட்டகைக்காரத் தெரு என்கிற நிலையில் இத்தெரு இருக்கிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்தியமூர்த்தி சாலையும் புதிய பேருந்து நிலையமும் @அண்டனூர் சுரா

பேரறிஞர் அண்ணா சிலை புதுக்கோட்டை கீழராஜ வீதியில் நிறுவப்பட காரணம் என்ன?

உலக நவீன நகரங்களில் ஒன்றாக புதுக்கோட்டை