ஒத்தத்தெரு @அண்டனூர் சுரா

கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை கிராமப் பஞ்சாயத்திற்குட்பட்டு ஒத்தவீடு என்றொரு குடியிருப்பு பகுதி உள்ளது. ஒரு காலத்தில் இக்குடியிருப்பு ஒத்த வீடாக இருந்ததால் அதற்கு அப்படியொரு பெயர். தற்போது பல வீடுகள் கொண்ட குடியிருப்பாக மாறிவிட்டது. இந்த ஒத்த வீட்டுடன் புதுக்கோட்டை ஒத்தத்தெருவை ஒப்பிட்டுப் பார்த்தேன். ஒத்தத்தெருவுக்கான பெயர்க்காரணம் வேறொன்றாக இருந்தது.

ஒத்தத்தெரு

புதுக்கோட்டை மச்சுவாடி, ஜீவா நகர் கடந்து நகரத்திற்குள் நுழைகையில் இடது பக்கம் செல்லும் குறுகிய தெருவுக்கு ஒத்தத்தெரு என்று பெயர். இத்தெருவுக்கும் அடுத்தத் தெரு ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம். இத்தெருவையொத்த தெருவாக இத்தெரு இருக்குமோ என்றும் தனி ஒரு தெரு என்பதால் ஒத்தத் தெரு என்று பெயரோ என்று நினைத்தேன். ஒத்தத் தெருவுக்குள் நுழைந்து சாலையின் இருபக்க குடியிருப்புகளையும் பார்க்கையில் புதுக்கோட்டை நகர வீதி, தெருக்களில் சற்றே மாறுபட்ட தெருவாக இத்தெரு இருந்தது. 

ஆமாம், இத்தெருவில் ஒரு பக்கம் மட்டுமே வீடுகள் உள்ளன. அதாவது முதன்மை சாலையிலிருந்து கிழக்கு மேற்காக செல்லும் சாலையில் சாலைக்கு வடபுறம் மட்டும் வீடுகள் உள்ளன. சாலைக்குத் தென்புறம் வீடுகள் இல்லை. தென்புறம் ராமச்சந்திரபுரம் அக்ரஹார வீடுகளின் பின்வாசலாகவும் அவ்வீடுகளுக்கான தோட்டமாகவும் உள்ளது

ஒரு பக்கம் மட்டும் குடியிருப்புகள் கொண்ட தெரு என்பதால் இதற்கு ஒத்தத் தெரு என்று பெயர். மிகக் குறுகலான, நீளம் குறைவாகக் கொண்ட தெரு இது. 

இப்படியான தெரு புதுக்கோட்டையில் வேறெங்கும் இருக்க வாய்ப்பில்லை. திருமயம் கடியாப்பட்டி ராமச்சந்திரபுரத்தில் இப்படியான தெரு உள்ளது.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்தியமூர்த்தி சாலையும் புதிய பேருந்து நிலையமும் @அண்டனூர் சுரா

பேரறிஞர் அண்ணா சிலை புதுக்கோட்டை கீழராஜ வீதியில் நிறுவப்பட காரணம் என்ன?

உலக நவீன நகரங்களில் ஒன்றாக புதுக்கோட்டை